Posts

Showing posts from October, 2023

ஓம் ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகள் - சுகமே சூழும்!!!

  மக்களோடு மக்களாக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்து வரும் சிறப்பான மகான் இவர்.  எப்போதும் அவர் தலையில் தலைப்பாகைகட்டிக்கொண்டு இருப்பார், அதனால் அவரை அனைவரும் தலப்பாகட்டு சுவாமிகள் என்று அழைப்பார்கள். மூக்குப்பொடி சித்தர், தாடிக்கார சித்தர், தலையாட்டி சித்தர், மவுன சித்தர் என்று சமீப காலத்தில் வாழ்ந்த சித்தர்களும், அவர்களது  செயல்பாடுகளாலேயேதான் அந்த பெயர்களால் அழைக்கப்பட்டனர். அந்த வரிசையில் ஸ்ரீ தலப்பாகட்டு ஸ்வாமிகளையும் சொல்லலாம். சுவாமிகள் அவர்கள் ஒரு நாள் உங்கள் வீட்டில் வந்து விஜயம் செய்தல் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகள் தன்னுடைய தவ வலிமையால் அனைத்தும் தீர்ந்துவிடும், ஆனால் அவருடைய விஜயம் அவர் நினைத்தால் மட்டுமே சாத்தியம். அவரை வீட்டிற்கு அழைத்து அவரிடம் ஆசி பெற்றால் வீட்டில் குலதெய்வத்தின் ஆசியும் மற்றும் அனைத்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.